வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய உடைப்பு தொடர்பான வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
வவுனியா வடக்கு, ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் பொலிசார் தாக்கல் செய்த வழக்கு மீதான விசாரணைகள் இன்று (10) வவுனியா நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.
இதன்போது பொலிசார் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான விசாரணை அறிக்கையினை மன்றில் சமர்ப்பித்ததுடன், இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் மன்றுக்கு தெரியப்படுத்தினர்.
குறித்த கருத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்திய மன்று குறித்த வழக்கை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்ததுடன், இது தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறும் விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் மன்று கட்டளை பிறப்பித்திருந்தது.