கஞ்சிப்பானை இம்ரானின் முக்கிய சகாக்கள் கைது!

Share

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு தேடப்பட்டு வரும் கஞ்சிப்பானை இம்ரானின் முக்கிய சகாக்கள் மூவரை இந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கஞ்சிப்பானை இம்ரானின் முக்கிய சகாக்களான சிரான் மற்றும் அவரது இரண்டு சகோதரர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கஞ்சிப்பானை இம்ரான் அணியில் உள்ள போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய புள்ளியான குடு செல்வியின் மகன்கள் என தெரியவந்துள்ளது.

இலங்கையில் இருந்து கடல் ஊடாக தமிழகம் சென்று போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இவர்கள் குறித்து தமிழக காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம்(28.03.2023) சென்னையில் வைத்து கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் நடைபெற்று வரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய படுகொலைகளுக்கு காரணமானவர்கள் என இவர்கள் மீது இலங்கையில் பல வழக்குகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு