சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த பிரான்ஸ் நடவடிக்கை

Share

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீனாவில் உள்ள பைட்டான்ஸ் நிறுவனத்தின் டிக்-டாக் செயலிக்கு பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்தன.

அதன்படி பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் டிக்-டாக் செயலியை அரசின் மின்னணு சாதனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

இவை தனியுரிமையை மீறுவதாக குற்றச்சாட்டு இருந்தது. அதுபோல ரஷியாவில் டிக்-டாக், ஸ்னப்-சாட், டெலிகிராம், வாட்ஸ் அப் போன்றவை பயங்கரவாத செயலிகளாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தனது நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா மற்றும் சீன நிறுவனத்தின் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும் என பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு