விவசாயிகளுக்கு உரம் மானியமாக வழங்கி வைப்பு

Share

வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு அடிக்கட்டு உரம் வழங்கும் நடவடிக்கை இன்று (23.03) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனடிப்படையில் முதல் கட்டமாக 30 மெற்றிக் தொன் உரம் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா, கோவில்குளம் கமநல அபிவிருத்தி நிலையத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு கால போக நெற் செய்கைக்காக மானிய விலை அடிப்படையில் யூரியா உரத்தைப் பெற்றுக் கொண்ட விவசாயிகளுக்கு இலவசமாக அடிக்கட்டு உரம் வழங்கப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் கோவில்குளம் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழான 5669 ஏக்கர் நெற்செய்கைக்காக 2423 விவசாயிகளுக்கு 84.4 மெற்றிக்தொன் அடிக்கட்டு உரம் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதில் முதல்கட்டமாக 30 மெற்றிக் தான் வவுனியாவிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் அதனை குறித்த கமநல அபிவிருத்தி நிலையத்தின் கீழான கல்வீரங்குளம் கமக்கார அமைப்பினால் விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இவ் ஆரம்ப நிகழ்வில் கோவில்குளம் கமநல அபிவிருத்தி நிலையத்தின் பொறுப்பதிகாரி திருமதி காஞ்சனா ரத்தினம், கமலநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு