பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 10 கிலோ மீற்றர் மரதன் ஓட்டப்போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் முதலிடம் பெற்றுள்ளார்.
சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் பிளாஸ்டிக் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மரதன் ஓட்டப்போட்டி நடத்தப்பட்டுள்ளது.
42 வயதான பிரவீனா நிமாலி மூன்று பிள்ளைகளின் தாயான பெண்ணே இந்த சாதனையை படைத்துள்ளார்.
இந்த மரதன் ஓட்டப்போட்டியில் பாரிஸ் நகரைச் சேர்ந்த 300 பெண்கள் கலந்து கொண்டதுடன், முதலாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் விசேட பரிசையும் தங்கப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.