கனடாவில் மணித்தியாலத்திற்கு வழங்கப்படும் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முக்கிய அறிவிப்பு மத்திய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் குறைந்தபட்ச சம்பளம் 16.65 டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் மத்திய அரசாங்கத்தின் குறைந்தபட்ச மணித்தியால சம்பளம் 15.5 டொலர்களாக காணப்பட்டது.
அந்நாட்டின் நுகர்வோர் விலைச்சுட்டி அடிப்படையில் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.