வடஇந்தியாவில் மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஹோலிப் பண்டிகை. இதையொட்டி, அரசுவிடுமுறை விடப்பட்டுள்ளதால், மக்கள் அனைவரும், வண்ணப்பொடிகளை தூவி கொண்டாடுவர்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.
தற்போது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒரு நாள், டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது.
ஏற்கனவே முடிந்த 3 டெஸ்டுகளில் இந்திய அணி 2 போட்டியிலும், ஆஸ்திரேலியா 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், கடைசிப் போட்டி வரும் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் வெற்றி பெற்றால்தான் இந்திய அணி உலகடெஸ்ட் சேம்பியன் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவில் அனைத்துப் பகுதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாடி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் கலர்பொடிகளை வீசி ஹோலி பண்டிகை கொண்டாடினர்.