இளைஞனின் விபரீத முடிவு

Share

யாழ்ப்பாணம் பாசையூர் ஈச்சமோட்டை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்றையதினம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

குறித்த இளைஞர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதிக்கு சென்று அங்குள்ள மரம் ஒன்றில் கயிற்றினை கட்டி அதில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

அவரது கையில் உள்ள வசனங்களை பார்வையிட்ட பொலிஸார், காதல் தோல்வியால் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

குறித்த இளைஞனின் உடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு