உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடன் நடத்துமாறு அரசை வலியுறுத்தி தலவாக்கலை நகரில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் அசோக சேபாலவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போராட்டத்தில் கட்சி செயற்பாட்டாளர்களும், மக்களும் கலந்துகொண்டனர்.
“தேர்தலை ஒத்திவைத்து மக்கள் சாபத்துக்கு உள்ளாகாதே, தேர்தலை உடன் நடத்து, மனித உரிமைகளை மீறி சர்வாதிகார ஆட்சி செய்யாதே, பொருட்களின் விலையைக் குறை, ரணில் – ராஜபக்ச குடும்பம் கொள்ளையடித்த மக்களுடைய சொத்தை திருப்பிக் கொடு” உள்ளிட்ட பல கோஷங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளைப் பதாகைகளில் எழுதி அவற்றைத் தாங்கிப் பிடித்திருந்தனர்.
.