அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தேவையில்லை என்று நாங்கள் நினைக்கிறோம் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
நேற்று கண்டியில் செய்தியாளர்களை மஹிந்த ராஜபக்ச சந்தித்தார். இதன்போது, அவரிடம் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த மஹிந்த, “அவ்வாறான(13ஆவது திருத்தம்) ஒரு சட்டம் அவசியம் என்று தற்போதைய அரசு நம்பினாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதே கருத்தைக் கொண்டிருக்கவில்லை – இது (13ஆவது திருத்தம்) தேவையில்லை என்று நாங்கள் நினைக்கின்றோம்” – என்று கூறினார்.