இவ்வாண்டிற்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 1600 கோடி ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்த செலவு கடந்த வருடங்களில் 450 கோடி ரூபாவாக இருந்ததாகவும், தற்போது அச்சிடும் செலவு நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மாகாண மற்றும் வலய பாடசாலைகளுக்கான பாடசாலை சீருடை துணி விநியோகத்தை நேற்று (24) ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பாடப்புத்தகங்களுக்கான அச்சிடல் முழுமையாக நிறைவடைந்த பின்னர், நாடு முழுவதும் உள்ள 48 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு மார்ச் 27ஆம் திகதிக்குள் பாடப்புத்தகங்கள் விநியோகித்து முடிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.