அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) புதிய தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கோப் குழுவின் கூட்டத்தில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அவர் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார் என்று நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாகவும் அவர் கோப் குழுவின் தலைவராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அரசாங்க நிதி பற்றிய குழுவின் (கோபா குழு) தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.