உள்ளூராட்சி சபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என உரிய கால எல்லையை அரசு அறிவிக்க வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“தேர்தல் என்பது மக்களின் ஜனநாயக உரிமை. அது நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம்.
தேர்தலை நடத்துவதற்கு நாட்டில் நிதி இல்லையென்றால், எப்போது நிதி கிடைக்கும், தேர்தல் எப்போது நடக்கும் எனக் கால எல்லையை அரசு நாட்டுக்கு அறிவிக்க வேண்டும்.
தேர்தலுக்காக வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி சம்பந்தமாக நிதி அமைச்சின் செயலாளர் தெளிவுபடுத்த வேண்டும்” – என்றார்.