முஜிபுர் ரஹ்மானைப் பலிக்கடாவாக்கிவிட்டார்கள்! – சபையில் ரணில் ஆதங்கம்

Share

“உங்களைப் பலிக்கடாவாக்கிவிடுவார்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டாம் என முஜிபூர் ரஹ்மானுக்கு நானும் தகவல் அனுப்பினேன்.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

“முஜிபூர் ரஹ்மானை நானே நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்தேன். அவர் தொடர்ந்தும் எம்.பியாக இருப்பதை விரும்பினேன்” – என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு, எம்.பி. பதவியை முஜிபூர் ரஹ்மான் இராஜிநாமா செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு