றக்பி உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் பிரான்ஸில் ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் போட்டித் தொடரில் வெற்றியீட்டி உலக சாம்பியனாகும் அணிக்கு பரிசளிக்கப்படும் வெற்றிக்கிண்ணம் இந்நாட்களில் காட்சிப்படுத்தப்படுகின்றது.
அந்த வகையில் முதல் தடவையாக றக்பி உலக சம்பியன் வெற்றிக்கிண்ணம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் இன்று(22) கண்டி நித்தவெல றக்பி மைதானத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு றக்பி உலக சம்பியன் பட்டத்தை வென்ற தென்னாபிரிக்க அணியில் இடம்பெற்ற வீரரான பிறையன் ஹபானா தலைமையிலான குழு வெற்றிக்கிண்ணத்தை ஏந்திவந்ததும் குறிப்பிடத்தக்கது.