கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக ஒல்கொட் மாவத்தையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
பல அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பெருந்தொகையான தொழில் அதிபர்கள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
துறைமுகங்கள், பெற்றோலியம், மின்சாரம், வங்கிகள் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களின் ஊழியர்கள் அதிகளவானோர் அந்த இடத்தில் குவிந்துள்ளனர்.